எழுதப்படாத காகிதமும், மைதீராத பேனாவும் போதும் எனக்கு,
இயன்றவரை எழுப்புவேன் இதயங்களை.
Wednesday, September 2, 2009
வேண்டாம் எனக்கு...
எழுதட்டும், எழுதட்டும்,
எழுதியே தீர்க்கட்டும் என் பேனா..
என் எழுத்துக்களால் இம்மண்ணில்
மீண்டும் மனிதம் தவழுமேயனால்.
பேனா மையும் பேப்பரும்
தீர்ந்தால் என்ன,
கடலின் நீலத்தை மையாக்கி,
மேகங்களில் எழுதி தீர்ப்பேன் நான்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல்
அழித்திடு இந்த ஜகத்தினை என்றான் பாரதி.
மனிதனுக்கும் மனிதத்துக்கும் இல்லாத
இவ்வானமும் கடலும் வேண்டாம் எனக்கு.
=======================================================
எழுதியே தீர்க்கட்டும் என் பேனா..
என் எழுத்துக்களால் இம்மண்ணில்
மீண்டும் மனிதம் தவழுமேயனால்.
பேனா மையும் பேப்பரும்
தீர்ந்தால் என்ன,
கடலின் நீலத்தை மையாக்கி,
மேகங்களில் எழுதி தீர்ப்பேன் நான்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல்
அழித்திடு இந்த ஜகத்தினை என்றான் பாரதி.
மனிதனுக்கும் மனிதத்துக்கும் இல்லாத
இவ்வானமும் கடலும் வேண்டாம் எனக்கு.
=======================================================
Monday, August 31, 2009
கண்ணீருடன் ஒரு கனவு...
மனிதம் மண்ணோடே போகட்டும்,
மனிதரெல்லாம் மிருகங்களாகவே வாழட்டும்.
இனி வேண்டாம் ஒரு வேற்றுமையும்,
மிருகங்களுக்கும் நமக்கும்.
டார்வினின் வாழ்க்கைத் தத்துவத்தின்படி,
மனிதர்கள் மனிதர்களாலேயே தின்னப்படுகிறார்கள்
இங்கு.
கனவுகள் கொள்ள வேண்டாம், மற்றவர்
கண்ணீரையும் துடைக்க வேண்டாம்.
சுயநலமும், சூழ்ச்சியும்,
தழைதொங்கட்டும் இவ்வுலகில்...
இவைகளினால் இன்றைய மானிடம்
முழுதும் அழிந்தவுடன்,
ஒரு விடியலில் தோன்றும், பனி தாங்கிய,
சின்னஞ்சிறு செடிதனைப் போல,
ஒரு புது உலகம் தோன்றட்டும்.
அன்றைய உலகில், டார்வினை பொய்யாக்கி,
வாழு வாழவிடு என்று புத்தனை வரவேற்போம்.
மனிதன் மனிதனாய் வாழட்டும் அன்று.
பாலைவன சோலையை போல,
இருண்ட பிரபஞ்சத்தில்,
அன்பால் பிரகாசிக்கட்டும் இந்த பூமி...
மற்றவரிடத்தில் அன்பு செய்வோம்,
இளைஞர்கள் நெஞ்சில் தீயை கொள்வோம்.
கொள்கை கொள்வோம், கொள்கைகள் மேல் கர்வம் கொள்வோம்.
தீங்கு செய்யோம், வாழும் தெய்வம் செய்வோம்.
மனிதர்களை நேசித்து ஓர் புது மானிடம் செய்வோம்.
இவ்வுலகில் ஓர் உயிர் இறந்தாலும்,
நம் நெஞ்சில் இறுக்கம் கொள்வோம்.
வாழ்த்து மகிழ்வோம்,
இம்மானுட பிறவியை.
அன்று நான் இல்லையென்றால் என்ன,
என் கனவுகள் நினைவாகி இருக்கும்.
கல்லறையில் இருந்து,
ஒரு கனம் எழுந்து,
பார்த்து, மகிழ்து, மடிவேன் மறுபடியும் நான்...
வாழ்த்து மகிழ்வோம்...
வாழ்வித்து மகிழ்வோம்…
======================================================
மனிதரெல்லாம் மிருகங்களாகவே வாழட்டும்.
இனி வேண்டாம் ஒரு வேற்றுமையும்,
மிருகங்களுக்கும் நமக்கும்.
டார்வினின் வாழ்க்கைத் தத்துவத்தின்படி,
மனிதர்கள் மனிதர்களாலேயே தின்னப்படுகிறார்கள்
இங்கு.
கனவுகள் கொள்ள வேண்டாம், மற்றவர்
கண்ணீரையும் துடைக்க வேண்டாம்.
சுயநலமும், சூழ்ச்சியும்,
தழைதொங்கட்டும் இவ்வுலகில்...
இவைகளினால் இன்றைய மானிடம்
முழுதும் அழிந்தவுடன்,
ஒரு விடியலில் தோன்றும், பனி தாங்கிய,
சின்னஞ்சிறு செடிதனைப் போல,
ஒரு புது உலகம் தோன்றட்டும்.
அன்றைய உலகில், டார்வினை பொய்யாக்கி,
வாழு வாழவிடு என்று புத்தனை வரவேற்போம்.
மனிதன் மனிதனாய் வாழட்டும் அன்று.
பாலைவன சோலையை போல,
இருண்ட பிரபஞ்சத்தில்,
அன்பால் பிரகாசிக்கட்டும் இந்த பூமி...
மற்றவரிடத்தில் அன்பு செய்வோம்,
இளைஞர்கள் நெஞ்சில் தீயை கொள்வோம்.
கொள்கை கொள்வோம், கொள்கைகள் மேல் கர்வம் கொள்வோம்.
தீங்கு செய்யோம், வாழும் தெய்வம் செய்வோம்.
மனிதர்களை நேசித்து ஓர் புது மானிடம் செய்வோம்.
இவ்வுலகில் ஓர் உயிர் இறந்தாலும்,
நம் நெஞ்சில் இறுக்கம் கொள்வோம்.
வாழ்த்து மகிழ்வோம்,
இம்மானுட பிறவியை.
அன்று நான் இல்லையென்றால் என்ன,
என் கனவுகள் நினைவாகி இருக்கும்.
கல்லறையில் இருந்து,
ஒரு கனம் எழுந்து,
பார்த்து, மகிழ்து, மடிவேன் மறுபடியும் நான்...
வாழ்த்து மகிழ்வோம்...
வாழ்வித்து மகிழ்வோம்…
======================================================
Subscribe to:
Posts (Atom)