எழுதட்டும், எழுதட்டும்,
எழுதியே தீர்க்கட்டும் என் பேனா..
என் எழுத்துக்களால் இம்மண்ணில்
மீண்டும் மனிதம் தவழுமேயனால்.
பேனா மையும் பேப்பரும்
தீர்ந்தால் என்ன,
கடலின் நீலத்தை மையாக்கி,
மேகங்களில் எழுதி தீர்ப்பேன் நான்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல்
அழித்திடு இந்த ஜகத்தினை என்றான் பாரதி.
மனிதனுக்கும் மனிதத்துக்கும் இல்லாத
இவ்வானமும் கடலும் வேண்டாம் எனக்கு.
=======================================================
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment